உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / சிறுமி பலாத்காரம்: வாலிபர் கைது

சிறுமி பலாத்காரம்: வாலிபர் கைது

ஆண்டிபட்டி: தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் விஷாலை ராஜதானி போலீசார் போக்சோ பிரிவில் கைது செய்தனர்.தேனி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக நன்னடத்தை அலுவலர் போதுமணி. இவருக்கு செப்., 21ல் குழந்தைகள் உதவி சேவை எண் 1098 மூலம் ஆண்டிபட்டி அருகே ஒருகிராமத்திலிருந்து சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.அதனடிப்படையில் அவர் விசாரித்த போது அப்பகுதியை சேர்ந்த பத்தாம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமியை அதே பகுதியைச் சேர்ந்த விஷால் பாலியல் பலாத்காரம் செய்தது தெரிந்தது. இதுகுறித்து போதுமணி அளித்த புகாரின்படி விஷாலை ராஜதானி போலீசார் போக்சோ சட்டப்பிரிவில் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை