உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ரேஷன் கடை முற்றுகை

ரேஷன் கடை முற்றுகை

போடி: போடி அருகே மேலச்சொக்கநாதபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட வினோபாஜி காலனியில் உள்ள ரேஷன் கடையில் பல மாதங்களாக தரமற்ற ரேஷன் அரிசி வினியோகம் செய்து வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று ரேஷன் பொருட்களை கடையில் இறக்குவதற்கு பணியாளர்கள் லாரியில் வந்துள்ளனர். இ.கம்யூ., மாவட்ட குழு உறுப்பினர் முருகேசன், போடி ஒன்றிய துணைச் செயலாளர் சின்ராஜ், பேரூராட்சி துணைத் தலைவர் பஞ்சவர்ணம் முன்னிலையில் அப்பகுதி மக்கள் ரேஷன் அரிசியை இறக்க விடாமல் தடுத்தனர். தரமான அரிசி வழங்க கோரி ரேஷன் கடை முன்பாக முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போடி வட்ட வழங்கல் அலுவலர் சிவக்குமார் மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். தரமான அரிசி வினியோகம் செய்யப்படும் எனக் கூறி லாரியை திருப்பி அனுப்பியதால் மக்கள் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை