ரேஷன் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
தேனி, ஆக. 14– தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு கூட்டுறவு சங்கங்களின் ஊழியர்கள் சங்கத்தினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் செந்தில்காமு தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் சண்முகம், மார்க்சிஸ்ட் கம்யூ., மாவட்ட ராமசந்திரன் முன்னிலை வகித்தனர். கம்பம் எம்.எல்.ஏ., ஜெகநாத்மிஸ்ரா ரேஷன் கடையில் ஆய்வு செய்த போது பணியாளரை அவமதித்து பேசியதை கண்டித்தும், ரேஷன் பொருட்களை பொட்டலங்களாக வழங்க கோரி கோஷமிட்டனர். செயல் தலைவர் பிச்சைமணி, பொருளாளர் கருப்பசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.