மேலும் செய்திகள்
பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு
04-May-2025
முல்லைப் பெரியாறு அணை நீரை நம்பி கம்பம் பள்ளத்தாக்கில் 14 ஆயிரத்து 707 ஏக்கர் நிலப்பரப்பில் இருபோக நெல் சாகுபடி நடந்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் முதல் போக நெல் சாகுபடிக்காக ஜூன் முதல் வாரத்தில் அணையில் நீர் இருப்பை பொறுத்து தண்ணீர் திறக்கப்படும்.தற்போது அணையின் நீர்மட்டம் 118.10 அடியாக இருப்பதாலும் தொடர்ந்து நீர்ப் பிடிப்பில் கனமழை பெய்து வருவதால் மேலும் நீர்மட்டம் உயரும் வாய்ப்பு இருப்பதாலும் இந்த ஆண்டு ஜூன் 1ல் கம்பம் பள்ளத்தாக்கு முதல் போக நெல் சாகுபடிக்காக தண்ணீர் திறக்கலாம் என அரசுக்கு நீர்ப்பாசனத் துறையினர் பரிந்துரை செய்துள்ளனர். அரசு உத்தரவு வந்த பின் தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதன் காரணமாக நெல்நாற்றுகள் வளர்ப்பதற்காக நாற்றாங்கால் அமைக்கும் பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். 5வது ஆண்டாக தொடர்கிறது
கடந்த 4 ஆண்டுகளாக ஜூன் 1ல் தண்ணீர் திறக்கப்பட்டது. 2021 ஜூன் 1ல் தண்ணீர் திறக்கும் போது நீர்மட்டம் 130.90 அடியாகவும், 2022 ஜூன் 1ல் 132.35 அடியாகவும், 2023 ஜூன் 1ல் 118.40 அடியாகவும், 2024 ஜூன் 1ல் 119.15 அடியாகவும் இருந்தது. தற்போது ஐந்தாவது ஆண்டாக தொடர்ந்து ஜூன் 1ல் தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுப்பதால் விவசாயிகளிடையே மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
04-May-2025