உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / சத்துணவு பணியாளர்கள் 150 பேருக்கு புத்தாக்க பயிற்சி

சத்துணவு பணியாளர்கள் 150 பேருக்கு புத்தாக்க பயிற்சி

தேனி : புத்தாக்கப்பயிற்சிக்கு 150 சத்துணவு பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.மாவட்டத்தில் அரசு, உதவி பெறும் பள்ளிகள் என மொத்தம் 711 மையங்களில் சத்துணவுகள் வழங்கப்படுகிறது. சுமார் ஆயிரத்திற்கும் அதிகமான பணியாளர்கள் பணிபுரிகின்றனர். இவர்களுக்கு ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் புத்தாக்க பயிற்சி வழங்கப்பட உள்ளது. இந்த பயிற்சிக்காக 150 சத்துணவு சமையலர்கள், உதவியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பயிற்சியில் உணவுப்பாதுகாப்புத்துறை, சுகாதாரத்துறை உள்ளிட்ட அரசுத்துறைகள் சார்பில் பயிற்சி வழங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை