மேலும் செய்திகள்
மண்டல அளவிலான விளையாட்டு போட்டி
03-Sep-2024
தேனி: மதுரை மண்டல அளவிலான பாலிடெக்னிக் மாணவர்களுக்கான வாலிபால் போட்டியில் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அணி முதலிடம் பிடித்தது.மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களில் உள்ள பாலிடெக்னிக் மாணவர்களுக்கான வாலிபால் போட்டி தேனி கோட்டூர் அரசு பாலிடெக்னிக் விளையாட்டு மைதானத்தில் நடந்தது. மதுரை மண்டல அளவில் நடந்த போட்டியில் ஆறு மாவட்டங்களை சேர்ந்த 18 அணிகள் பங்கேற்றன. முதலிடத்தை ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை முகமது சதக் பாலிடெக்னிக், 2ம் இடத்தை விருதுநகர் அரசன் கணேசன் பாலிடெக்னிக் அணிகள் வென்றன. போட்டிகளை கோட்டூர் அரசு பாலிடெக்னிக் முதல்வர் சரவணக்குமார் தலைமையில் ஆசிரியர்கள் ஒருங்கிணைத்தனர்.
03-Sep-2024