உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கேரளாவில் இருந்து போடிமெட்டில் கொட்டிய பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றம்

கேரளாவில் இருந்து போடிமெட்டில் கொட்டிய பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றம்

போடி: தேனி மாவட்டம், போடிமெட்டு பகுதியில் கேரளாவில் இருந்து கொட்டப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளை வனத்துறை, மேலச்சொக்கநாதபுரம் பேரூராட்சி நிர்வாகத்தினர் அகற்றினர்.தமிழக, கேரளாவை இணைக்கும் வழித்தடத்தில் போடிமெட்டு அமைந்துள்ளது. இரு நாட்களுக்கு முன்பு போடி மெட்டு 5 வது வளைவின் பள்ளத்தில் பிளாஸ்டிக் பைகளில் மூடையாக கழிவுகள் கொட்டப்பட்டு இருந்தன. இந்த வீடியோ வைரலானது. குரங்கணி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்ட போது, மூடைகளில் பிளாஸ்டிக் பாட்டில், பாலிதீன் கழிவுகள் இருந்தன.கேரள, தமிழக போலீஸ், வனத்துறை செக் போஸ்ட் இருந்தும் வாகனங்களை சோதனை செய்யாததால் பிளாஸ்டிக், பாலிதீன், உணவு கழிவுகளை தமிழக வனப்பகுதி போடிமெட்டில் கொட்டி செல்கின்றனர்.இது குறித்து தினமலர் நாளிதழில் நேற்று செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக வனத்துறை, மேலச்சொக்கநாதபுரம் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் பிளாஸ்டிக் கழிவுகளை நேற்று டிராக்டர் மூலம் அகற்றினர். அந்த இடங்களில் கிருமிநாசினி பவுடர் தெளித்து சுத்தம் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி