உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / புதுப்பிக்கப்பட்ட பெயர் பலகை வளைவு திறப்பு விழா

புதுப்பிக்கப்பட்ட பெயர் பலகை வளைவு திறப்பு விழா

தேனி; தேனி அல்லிநகரம் நகராட்சி காமராஜர் நினைவு பஸ் ஸ்டாண்டில் புதுப்பிக்கப்பட்ட பெயர் பலகை வளைவு திறப்பு விழா நேற்று நடந்தது. எம்.பி., தங்கதமிழ்செல்வன் புதுப்பிக்கப்பட்ட பெயர் பலகை, கல்வெட்டினை திறந்து வைத்தார். பெரியகுளம் எம்.எல்.ஏ., சரவணக்குமார் முன்னிலை வகித்தார். விழாவில் தேனி நகராட்சித் தலைவர் ரேணுப்பிரியா, கமிஷனர் ஏகராஜ், துணைத் தலைவர் செல்வம், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் நாராயணபாண்டியன், தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறைத் தலைவர் ராஜமோகன், துணைத் தலைவர் கணேஷ், பொதுச்செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் பழனியப்பன் பேசினர். விழாவில் நகராட்சி கவுன்சிலர்கள், முக்கிய பிரமுகர்கள், தொழிலதிபர்கள், உறவின்முறை ஆட்சி மன்ற குழு உறுப்பினர்கள், உறவின் முறை அனைத்து நிறுவனங்களின் செயலாளர்கள், இணைச் செயலாளர்கள், தேனி நட்டாத்தி ஷத்திரியகுல இந்து நாடார்கள் உறவின்முறை தலைவர் சுப்பிரமணியம், துணைத் தலைவர் மாரீஸ்வரன், செயலாளர் கமலக்கண்ணன், பொருளாளர் அடைக்கலம் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். நிகழ்வில் பங்கேற்ற பொது மக்கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ