மேலும் செய்திகள்
குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்
02-Nov-2024
கூடலுார் : கூடலுார் நெடுஞ்சாலையில் உடைப்பு ஏற்பட்ட மெயின் பகிர்மானக் குழாய் தினமலர் நாளிதழ் செய்தியால் சீரமைப்பு பணி துவங்கியது.கூடலுார் நெடுஞ்சாலை பழைய தபால் நிலையம் அருகே குடிநீர் மெயின் பகிர்மானக் குழாய் இரண்டு தினங்களுக்கு முன்பு உடைப்பு ஏற்பட்டது. இதனால் வீணாக குடிநீர் வெளியேறி வந்தது. இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. இந்நிலையில் கூடலுார் நகராட்சி அலுவலர்கள் உடனடியாக சீரமைப்பு பணியை துவக்கியுள்ளனர். நெடுஞ்சாலையில் வாகனப் போக்குவரத்து அதிகம் உள்ளதால் கூடுதல் பணியாளர்கள் மூலம் விரைவாக சீரமைப்பு பணியை செய்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அடிக்கடி உடைப்பு ஏற்படுவதால் பல ஆண்டுகளுக்கு முன்பு பதிக்கப்பட்ட பழைய மெயின் பகிர்மானக் குழாயை மாற்றி புதிய குழாய் பதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.
02-Nov-2024