உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / செக்யூரிட்டி கொலை வழக்கு கிரைம் பிராஞ்சில் ஒப்படைக்க அறிக்கை

செக்யூரிட்டி கொலை வழக்கு கிரைம் பிராஞ்சில் ஒப்படைக்க அறிக்கை

மூணாறு: மூணாறு அருகே செக்யூரிட்டி கொலை செய்யப்பட்டு ஒரு மாதம் கடந்தும் விசாரணையில் எவ்வித முன்னேற்றமும் இல்லாததால் வழக்கை கிரைம் பிராஞ்ச் போலீசாரிடம் ஒப்படைக்குமாறு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. கன்னிமலை எஸ்டேட், பாக்டரி டிவிஷனைச் சேர்ந்த செக்யூரிட்டி ராஜபாண்டி 68, சொக்கநாடு எஸ்டேட் தேயிலை பாக்டரியில் ஆக.23ல் பணியின் இடையே கொடூரமாக கொலை செய்யப்பட்டார். மூணாறு டி.எஸ்.பி. அலெக்ஸ்பேபி தலைமையில் 18 பேர் கொண்ட தனிப்படை போலீசார் விசாரிக்கின்றனர். அச்சம்பவத்தில் குற்றவாளிகளை குறித்து இதுவரை எவ்வித தகவலும், தடயங்களும் கிடைக்கவில்லை. கொலை தொடர்பாக துப்பு கொடுப்பவர்களுக்கு ரூ.25 ஆயிரம் பரிசு வழங்குவதாக போலீசார் அறிவித்தும், கொலைக்கு பயன்படுத்திய ஆயுதத்தை ' மெட்டல் டிடேக்டர்' மூலம் நீர் நிலைகளில் தேடியும் பலன் இன்றி போனது. சம்பவம் நடந்து ஒரு மாதம் கடந்தும் விசாரணையில் எவ்வித முன்னேற்றமும் இல்லை என்பதால் வழக்கை கிரைம் பிரான்ஞ் போலீசாரிடம் ஒப்படைக்குமாறு டி.எஸ்.பி. அலெக்ஸ்பேபி, இடுக்கி எஸ்.பி.சாபு மாத்யூவிடம் அறிக்கை தாக்கல் செய்தார். அதற்கான நடவடிக்கைகள் அனைத்தும் பூர்த்தியாகும் வரை வழக்கை தனிப்படை போலீசார் விசாரிப்பார்கள் என டி.எஸ்.பி. தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி