உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / குடியரசு தின விளையாட்டு போட்டி: உற்சாகமாக பங்கேற்ற மாணவர்கள்

குடியரசு தின விளையாட்டு போட்டி: உற்சாகமாக பங்கேற்ற மாணவர்கள்

தேனி: பள்ளி மாணவர்களுக்கான குடியரசு தின விளையாட்டு போட்டிகளில் மாணவர்கள் உற்சாகமாக பங்கேற்றனர். குடியரசு தினவிழாவை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு கல்வித் துறையால் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. மாவட்ட அளவிலான போட்டிகள் நேற்று துவங்கின. இதில் வெற்றி பெறுபவர்கள் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ளனர். போட்டிகள் 14, 17, 19 வயதிற்கு உட்பட்ட மாணவர்கள், மாணவி களுக்கு நடக்கிறது. தேனி மாவட்ட விளையாட்டு அரங்கில் ஹாக்கி, நாடார் சரஸ்வதி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கோ-கோ, முத்துத்தேவன்பட்டி வேலம்மாள் பள்ளியில் டேபிள் டென்னிஸ் போட்டிகள் நடந்தன. போட்டிகளில் மாணவர்கள், மாணவிகள் உற்சாகத்துடன் பங்கேற்றனர். மாணவர்களுக்கான கோ-கோ போட்டியில் 14, 17 வயது பிரிவுகளில் தேனி என்.எஸ்., ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, 19 வயது பிரிவில் டி.சிந்தலசேரி அமல அன்னை மேல்நிலைப்பள்ளி அணிகள் முதலிடம் வென்றன. ஹாக்கி போட்டியில் மாணவர்கள் பிரிவில் 14, 17 வயது பிரிவுகளில் தேனி நாடார் சரஸ்வதி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, 19 வயது பிரிவில் வெங்கடாசலபுரம் ஸ்ரீவரத வேங்கட ரமண மேல்நிலைப் பள்ளி அணிகள் முதலிடம் பிடித்தன. மாணவிகளுக்கான போட்டியில் 14, 19 வயது பிரிவுகளில் வெங்கடாசலபுரம் ஸ்ரீவரதவேங்கடரமண மேல்நிலைப்பள்ளி அணிகள், 17 வயது பிரிவில் ராயப்பன்பட்டி புனித ஆக்னஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி அணிகள் முதலிடம் வென்றன. உத்தமபாளையம்: இராயப்பன் பட்டி புனித அலோசியஸ் மேல்நிலைப் பள்ளியில் நடந்த எறிபந்து போட்டியில் 17 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் அலோசியஸ் பள்ளியும், கம்பம் இலாஹி ஒரியண்டல் பள்ளியும் மோதின. இதில் புனித அலோசியஸ் பள்ளி வெற்றி பெற்றது. பின்னர் 14 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் புனித அலோசியஸ் பள்ளியும் முத்துத்தேவன்பட்டி மேலப்பேட்டை இந்து நாடார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியும், 19 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் கம்பம் சிபியூ மேல் நிலைப் பள்ளியும், மேலப்பேட்டை இந்து நாடார் மெட்ரிக் மேல் நிலைப் பள்ளியும் இறுதி போட்டியில் மோது கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ