உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / வராகநதியில் தடுப்பு சுவர் கட்ட கோரிக்கை

வராகநதியில் தடுப்பு சுவர் கட்ட கோரிக்கை

பெரியகுளம்: பெரியகுளம் சுதந்திர வீதி வராக நதியில் விடுபட்ட 100 மீட்டர் தடுப்புச் சுவரை விரைவில் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். பெரியகுளம் தண்டுப்பாளையம் சுதந்திரவீதி வராக நதி கரையோரப் பகுதியில் 40 அடிக்கு கீழ்ப் பகுதியில் வராகநிதி செல்கிறது. நெடுஞ்சாலை துறையினர் பாதுகாப்பு தடுப்புச்சுவர் கட்டினர்.மழை காரணமாக தண்ணீர் அதிகளவில் செல்கிறது. இந்நிலையில் காளியம்மன் கோயில் எதிர்ப்புறம் வராகநதி தடுப்புச் சுவர் 100 மீட்டர் கட்டாமல் இடைவெளி உள்ளது. இதனை கட்ட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இதில் கடந்தவாரம் ஒருவர் விழுந்து காயமடைந்தார். இந்தப்பகுதியை கடந்து தான் டூவீலர், கார் முதல் ஏராளமான வாகனங்கள் சென்று வருகிறது. அசம்பாவிதம் ஏதாவது நடப்பதற்குள் நெடுஞ்சாலைத்துறை நிர்வாகம் விடுபட்ட பகுதியை கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி