உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / அரசமரத்துகுளம், சீதாகுளத்திற்கு 18ம் கால்வாய் தண்ணீர் திறக்க கோரிக்கை

அரசமரத்துகுளம், சீதாகுளத்திற்கு 18ம் கால்வாய் தண்ணீர் திறக்க கோரிக்கை

தேவாரம்; தேவாரம் அருகே விளைநிலங்கள் பயன்பெறும் வகையில் அரசமரத்து குளம், கரிசல்குளம், சீதாகுளம் கண்மாய்களுக்கு 18ம் கால்வாய் நீரை திறந்து விட நீர்வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.உத்தமபாளையம் ஒன்றியத்திற்கு உட்பட்ட டி.சிந்தலைசேரியில் அரசமரத்துகுளம் கண்மாயும், சின்னமனூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட சங்கராபுரம் சீதாகுளம் கண்மாய்கள் உள்ளது. இக் கண்மாயில் நீர் நிரம்புவதன் மூலம் எஸ்.தர்மத்துப்பட்டி, சங்கராபுரம், கந்தசாமிபுரம், நாகலாபுரம் உள்ளிட்ட பல கிராமங்கள் பயன் பெறும். 300 ஏக்கருக்கு மேல் விவசாய நிலங்களில் மறைமுகமான பாசன வசதி பெறும்.18 ம் கால்வாய் விவசாயிகள் சங்க நிர்வாகி பி.கே.பிரபு கூறியதாவது: முல்லைப் பெரியாறு அணையில் இருந்து 18ம் கால்வாய் தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. இந்த நீர் பண்ணைப்புரம் கிழக்கு பகுதியில் உள்ள சங்கப்பன்குளம் கண்மாய் வரை வந்துள்ளது. இக் கண்மாய் நிரம்பிய நிலையில் அருகே உள்ள பொம்மிநாயக்கன்பட்டி கரிசல்குளம் கண்மாய், டி.சிந்தலைச் சேரிக்கு உட்பட்ட அரசமரத்துகுளம், சங்கராபுரத்தில் உள்ள சீதாகுளம் கண்மாய்க்கு நீர் திறந்து விட வேண்டும். ஆனால் 3 ஆண்டுகள் ஆகியும் இதுவரை இக்கண்மாய்களுக்கு தண்ணீர் திறந்து விடவில்லை. இதனால் கண்மாய்கள் வறண்டு, நிலத்தடி நீர்மட்டம் குறைந்து உள்ளது.விவசாய பணிமேற்கொள்வதில் சிரமம் அடைந்து வருகின்றனர். விவசாயிகள் பயன் பெறும் வகையில் கரிசல்குளம், அரசமரத்துகுளம், சீதாகுளம் கண்மாய்களுக்கு 18 ம் கால்வாய் தண்ணீரை திறந்து விட நீர்வளத்துறை, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை