உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  வைகை அணையை துார்வார கோரிக்கை

 வைகை அணையை துார்வார கோரிக்கை

தேனி: வைகை அணையை துார்வாரிட வேண்டுமென தேனி மாவட்ட விவசாயிகள் சங்க தலைவர் பாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளார். அவர் கூறி உள்ளதாவது, வைகை அணை உருவாக்கி 66 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிறது. இந்த அணையால் சுமார் 1.36 ஏக்கர் லட்சம் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. வைகை அணையை துார்வாருவதன் மூலம் அரசிற்கு ரூ.245.5 கோடி வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளது. பாசனம் அற்ற பகுதிகளும் பாசன வசதி பெறும். அணையை தற்போது வரை துார்வாராததால் 20 சதவீதம் வண்டல் படிந்துள்ளது. இந்த வண்டல்மண் அதிக சத்துள்ளது. மத்திய அரசு சார்பில் சில ஆண்டுகளுக்கு முன் பொறியாளர் குழுவினர் துார்வாருதல் தொடர்பாக அறிக்கை தயாரித்தனர். தமிழக அரசு 1.36 லட்சம் ஏக்கர் நிலங்களின் பாசனம் கருதி அணையை துார்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை