உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஆக்கிரமிப்புகளை அகற்றி ரோடு அமைக்க கோரிக்கை

ஆக்கிரமிப்புகளை அகற்றி ரோடு அமைக்க கோரிக்கை

பெரியகுளம்: ''முதல்வர் கிராம சாலை திட்டத்தில் ரூ.44 லட்சம் மதிப்பீட்டில் ரோடு அமைக்கும் பணிகளை துவக்குவதற்கு முன், ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.'' என, அழகர்சாமிபுரம் பொது மக்கள் வலியுறுத்தி உள்ளனர். பெரியகுளம் ஒன்றியம் கீழ வடகரை ஊராட்சியில் உள்ள அழகர்சாமிபுரம். இப்பகுதியில் நுாற்றுக்கணக்கான மக்கள் வசிக்கின்றனர். அழகர்சாமிபுரம் பாலம் கல்லார் ரோடு பகுதி வடகரை இணைப்பு பகுதியாக உள்ளது. தினமும் இதன் வழியாக ஏராளமானோர் சென்று வருகின்றனர். நுாற்றுக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களுக்கும் இந்த ரோட்டை கடந்து தான் மா, தென்னை விவசாயிகள் செல்ல வேண்டிய அவசியம் உள்ளது. இவ்வாறு முக்கியத்துவம் வாய்ந்த இந்த ரோடு40 அடி அகலம் உடையது. வீட்டின் முன் ஆக்கிரமிப்புகள், பெட்டிக் கடைகள் உட்பட பலரும் ஆக்கிரமித்து இருப்பதால் ரோட்டின் அகலம் 15 அடியாக சுருங்கிவிட்டது. முதல்வர் கிராமச் சாலை திட்டத்தின் கீழ் ஒரு கி.மீ., ரோடு ஆக்கிரமிப்புகளை அகற்றி ரூ.44 லட்சம் மதிப்பீட்டில் ரோடு அமைப்பதற்கு பூமி பூஜை நடத்தப்பட்டது. ஆனால் ஒப்பந்ததாரர் ஆக்கிரமிப்பு அகற்றாமல் ரோடு அமைக்கக்கூாடது என அழகர்சாமிபுரம் பொது மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ