உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பன்னீர் திராட்சையை இருப்பு வைத்து விற்பனை செய்யும் தொழில்நுட்பம் தோட்டக்கலைத்துறை நடவடிக்கை எடுக்க கோரிக்கை

பன்னீர் திராட்சையை இருப்பு வைத்து விற்பனை செய்யும் தொழில்நுட்பம் தோட்டக்கலைத்துறை நடவடிக்கை எடுக்க கோரிக்கை

கம்பம் : ''பன்னீர் திராட்சையை இருப்பு வைத்து விற்பனை செய்யும் தொழில்நுட்பத்தை திராட்சை விவசாயிகளுக்கு விளக்கவும், அதற்கான வசதிகளை செய்து தர தோட்டக்கலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.'' என, திராட்சை விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆண்டு முழுவதும் திராட்சை கிடைக்கும் பகுதி என்ற பெருமையை கம்பம் பள்ளத்தாக்கு பெற்றுள்ளது. ஆண்டிற்கு மூன்று அறுவடை நடைபெறுவதால், எப்போதும் திராட்சை கிடைக்கும். ஆனால் தமிழகத்தில் நவம்பர் இறுதி வாரத்தில் மகாராஷ்டிராவின் விதையில்லா திராட்சை வரத்து ஆரம்பமாகும். ஏப்ரல் இறுதி வரை வரத்து இருக்கும். அதாவது ஆண்டிற்கு 6 மாதங்கள் மகாராஷ்டிரா விதையில்லா திராட்சை தமிழகத்தில் இருக்கும். அந்த சீசனில் கம்பம் பன்னீர் திராட்சைக்கு விலை கிடைக்காது. இருப்பு வைக்கவும் முடியாது. பறித்தவுடன் விற்பனை செய்ய வேண்டும். எனவே கேட்ட விலைக்கு கொடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு பன்னீர் திராட்சை விவசாயிகள் தள்ளப்படுகின்றனர். இதனால் விவசாயிகளுக்கு பொருளாதார இழப்பு ஏற்படுகிறது. எனவே பன்னீர் திராட்சையை இருப்பு வைத்து, தேவை அல்லது நல்ல விலை கிடைக்கும் போது விற்பனை செய்ய, திராட்சை விவசாயிகளுக்கு தோட்டக்கலைத்துறை உதவிட வேண்டும். இருப்பு வைப்பதற்கு தேவையான குளிர்சாதன கிட்டங்கி வசதிகள் கம்பம், சின்னமனுார் ஒழுங்கு முறை விற்பனை கூடங்களில் உள்ளன. எனவே பன்னீர் திராட்சையை விவசாயிகள் இருப்பு வைத்து விற்பனை செய்யும் தொழில்நுட்பங்களை தோட்டக்கலைத்துறை விவசாயிகளுக்கு பயிற்சியளிக்க வேண்டும். இதன் மூலம் விலை கிடைக்கும் சமயங்களில் விற்பனை செய்ய முடியும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை