கூடலுாரில் பட்டாசு வெடிக்க தடை விதித்து தீர்மானம்
கூடலுார்: கூடலுார் நகராட்சியில் பட்டாசு வெடிக்க தடை விதித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.கூடலுார் நகராட்சி கூட்டம் தலைவர் பத்மாவதி (தி.மு.க.) தலைமையில் நடந்தது. கமிஷனர் (பொறுப்பு) கோபிநாத் முன்னிலை வகித்தார்.நகராட்சி பகுதிகளில் திருமணம், குடும்ப நிகழ்வுகள், இறுதி ஊர்வலம் உள்ளிட்டவைகளில் பட்டாசு வெடிப்பதால் பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறாக உள்ளது. மேலும் அதிக சத்தத்துடன் வெடிக்கும் பட்டாசுகளால் முதியவர்கள் குழந்தைகள் பாதிக்கப்படுவதோடு புகை மண்டலம் உருவாகி சுற்றுச்சூழல் மாசு ஏற்படுகிறது. அதனால் தீபாவளி பண்டிகை நாள் தவிர மற்ற நாட்களில் பட்டாசு வெடிக்க தடைவிதித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தடையை மீறி பட்டாசு வெடிப்பவர்கள் மீது சட்ட விதிகளுக்கு உட்பட்டு காவல்துறை மூலமாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.செட் அமைப்பது, தூய்மை பணியாளர்களுக்கு சீருடை வழங்குவது, மழை நீர் வடிகால் அமைப்பது, ராஜீவ் காந்தி நகரில் புதியதாக குடிநீர் மேல்நிலைத் தொட்டி கட்டுவது, தொழில் மற்றும் வியாபாரம் நிறுவனங்களுக்கு உரிமக் கட்டணம் வசூலிப்பது உள்ளிட்ட 18 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.