விபத்தை தடுக்க சாக்கடை கால்வாய் அருகே தடுப்பு சுவர்
தேனி: தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக தேனி நேரு சிலை அருகே சாக்கடை அருகே தடுப்பு சுவர் அமைக்கப்பட்டுள்ளது.தேனி நேரு சிலை அருகே கம்பம் ரோட்டில் திறந்த வெளி சாக்கடை உள்ளது. மதுரை ரோட்டில் இருந்து கம்பம் ரோட்டில் வளையும் வாகனங்கள் இந்த சாக்கடை பள்ளத்தில் விழும் அபாயம் இருந்தது. இதனை சுட்டிகாட்டி தினமலர் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து திறந்த நிலையில் சாக்கடை கால்வாய் இருந்த இடத்தில் அதிகாரிகள் தடுப்பு சுவர் அமைத்துள்ளனர்.