உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ரூ.98 லட்சம் செலவில் ரோடு அமைக்கும் பணி தீவிரம்

ரூ.98 லட்சம் செலவில் ரோடு அமைக்கும் பணி தீவிரம்

போடி: தினமலர் நாளிதழின் செய்தி எதிரொலியால் நபார்டு திட்டத்தின் கீழ் சில்லமரத்துப்பட்டி - பெருமாள் கவுண்டன்பட்டி விலக்கு வரை புதிதாக ரோடு அமைக்கும் பணி தீவிரமாக நடந்த வருகிறது. போடி அருகே சில்லமரத்துப் பட்டியில் இருந்து பெருமாள் கவுண்டன் பட்டி விலக்கு வரை ரோடு அமைத்து பல ஆண்டுகள் ஆகிறது. டூவீலர் கூட செல்ல முடியாத அளவிற்கு கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக இருந்தன. பெருமாள் கவுண்டன்பட்டி சில்லமரத்துப்பட்டிக்கு பஸ் வசதி இல்லை. இதனால் சேதம் அடைந்த ரோட்டில் மாணவர்கள் சைக்கிளில் பள்ளிக்கு சென்று வரவும், மக்கள் மருத்துவ வசதி பெறவும், விளை பொருட்களை கொண்டு வர விவசாயிகள் சிரமம் அடைந்தனர். வாகன ஓட்டிகளும் சிரமப்பட்டனர். இதுகுறித்து தினமலர் நாளிதழில் புகைப்படத்துடன் கூடிய செய்தி வெளியானது. இதன் எதிரொலியால் சில்லமரத்துப்பட்டி - பெருமாள் கவுண்டன் பட்டி விலக்கு வரை 2.4 கி.மீ., ரோடு நபார்டு திட்டத்தின் மூலம் ரூ.98 லட்சம் மதிப்பில் புதிதாக அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இதனால் அப்பகுதி மக்கள், மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை