வழிப்பறி செய்தவர் கைது
தேனி: தேனி குப்பிநாயக்கன்பட்டி லட்சுமிபுரம் சிவா 23. இவர் ஜன., 16ல் கர்னல் ஜான்பென்னிகுவிக் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் சிறுநீர் கழிக்க சென்றார். அங்கு வந்த வாலிபர் சிவாவை தாக்கி பணம் ரூ.1800, அவர் அணிந்திருந்த செயின், வெள்ளி அரைஞாண் கயிறு உள்ளிட்டவற்றை பறித்து சென்றார். சிவா புகாரில் தேனி போலீசார் விசாரித்தனர். இச்சம்பவத்தில் தொடர்புடைய போடி வினோபாஜி நகர் தர்மதுரை 29, என்பவரை இன்ஸ்பெக்டர் ஜவஹர் தலைமையிலான போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.