மேலும் செய்திகள்
ஆண்டிபட்டி அருகே டூவீலர்கள் மோதல்: பெண் பலி
29-Aug-2024
ஆண்டிபட்டி : ஆண்டிபட்டியில் ஆசிரியரிடம் தாலி செயின் பறிப்பு, பஸ் ஸ்டாண்ட் அருகே நகைக்கடை சுவரில் துளையிட்டு கொள்ளை முயற்சி சம்பவங்கள் குறித்து தேனி எஸ்.பி. சிவபிரசாத் ஆண்டிபட்டியில் விசாரணை மேற்கொண்டார்.ஆண்டிபட்டி பாப்பம்மாள்புரத்தில் செப்., 23 ல் வீட்டை ஒட்டி இருந்த பல சரக்கு கடையில் பொருள் வாங்க வந்த நபர் ஆசிரியையிடம் 5 பவுன் தாலி செயினை பறித்து இருசக்கர வாகனத்தில் தயாராக இருந்தவருடன் தப்பிச் சென்றார். அடுத்த இரு நாட்களில் ஆண்டிபட்டி பஸ் ஸ்டாண்ட் அருகே எப்போதும் ஆட்கள் நடமாட்டம் உள்ள இடத்தில் செயல்படும் நகைக்கடையில் சுவரில் துளையிட்டு கொள்ளையடிக்க முயற்சித்துள்ளனர். போலீசார் பொதுமக்கள் திரண்டு வருவதை அறிந்த கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இந்த இரு சம்பவங்களிலும் குற்றவாளிகள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. சம்பவ இடங்களில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் அடிப்படையில் போலீசார் விசாரிக்கின்றனர். தொடர் குற்ற சம்பங்களை தொடர்ந்து தேனி எஸ்.பி., சிவபிரசாத் நேற்று முன்தினம் இரவு ஆண்டிபட்டியில் விசாரணை நடத்தினார். சம்பவ இடங்களின் அருகே உள்ள கண்காணிப்பு கேமராக்களில் ஒரு வாரத்திற்கு முன்பு பதிவான காட்சிகளில் சந்தேகப்படும்படி வந்து சென்றவர்கள் குறித்து கண்காணிக்க போலீசாரை அறிவுறுத்தி சென்றுள்ளார்.
29-Aug-2024