உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஏலச் செடிகளில் அழுகல் நோய்: விவசாயிகள் கவலை

ஏலச் செடிகளில் அழுகல் நோய்: விவசாயிகள் கவலை

கூடலுார்,: இடுக்கி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக ஏலச்செடிகளில் ஏற்பட்டுள்ள அழுகல் நோய் பாதிப்பால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். கேரளா இடுக்கி மாவட்டத்தில் 2 லட்சம் ஏக்கர் பரப்பளவில் ஏலக்காய் சாகுபடியாகிறது. இதில் கூடலுார், கம்பம், காமயகவுண்டன்பட்டி பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள் ஏலக்காய் சாகுபடி செய்கின்றனர். தினம்தோறும் நுாற்றுக்கணக்கான ஜீப்புகளில் தொழிலாளர்கள் சென்று விவசாய பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். தென்மேற்கு பருவமழை மே 23ல் துவங்கியதில் இருந்து அடிக்கடி தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் ஏலச் செடிகளில் அழுகல் நோய் பாதிப்பு அதிகமாகி உள்ளது. குமுளி, ஜக்குபள்ளம், முறுக்கடி, வல்லாரங்குன்னு, வண்டன் மேடு, ஆனைவிலாசம் உள்ளிட்ட பகுதிகளில் இந்நோய் அதிகம் தாக்கியுள்ளது. இதனால் மக சூல் குறையும் அபாயமும் உள்ளது. வழக்கமாக ஆகஸ்டில் ஏலக்காய் பறிப்பு துவங்கும். மழையால் அழுகல் நோய் அதிகம் தாக்கியுள்ள ஏலக்காய் பறிப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !