உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மூணாறில் மூன்றாம் நாளாக ரோட்டோர கடைகள் அகற்றம்

மூணாறில் மூன்றாம் நாளாக ரோட்டோர கடைகள் அகற்றம்

மூணாறு: மூணாறில் ரோட்டோர கடைகள் அகற்றும் பணி நேற்று மூன்றாம் நாளாக நடந்தது.மூணாறில் செப்.9ல் நடந்த போக்குவரத்து ஆலோசனை குழு கூட்டத்தின் முடிவுபடிரோட்டோர கடைகள் அகற்றும் பணி ஊராட்சி, பொதுப்பணிஆகிய துறைகள் சார்பில் அக்.25 முதல் நடந்து வருகிறது.நேற்று முன்தினம் ஞாயிறு விடுமுறை என்பதால் பணிகள் நடக்கவில்லை.நேற்று மூன்றாம் நாளாக கடைகள் அகற்றும் பணி நடந்தது. நகரில் மாட்டுபட்டி ரோடு, பி.எஸ்.என்.எல். அலுவலகம் எதிரில், மூணாறு, உடுமலைபேட்டை ரோட்டில் பெரிய வாரை எஸ்டேட் உள்பட பல்வேறு பகுதிகளில் கடைகள் அகற்றப்பட்டன.நகரில் மெயின் பஜாரில் கடைகளுக்கு முன்பு நடைபாதையில்வைக்கப்பட்டிருந்த பொருட்களையும் ஒழுங்குபடுத்தினர். ரோட்டோர கடைகள் அகற்றும் பணி இன்றும் (அக். 29 ) தொடரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ