வீட்டிற்கு வந்த தோழியிடம் ரூ.1 லட்சம் திருட்டு
பெரியகுளம்: தங்க நகை வாங்க பெரியகுளம் வந்த கற்பகராணியிடம் ரூ.1 லட்சம் திருடியதாக அவரது தோழி அம்முபிரியாவிடம் போலீசார் விசாரிக்கின்றனர். சின்னமனூர் அருகே குச்சனூர் பாரதியார் தெருவைச் சேர்ந்தவர் கற்பகராணி 33. ஆயுர்வேத பொருட்கள் விற்பனை செய்து வருகிறார். இவரும் பெரியகுளம் பாரதிநகரைச் சேர்ந்தவர் அம்முபிரியா 25. இருவரும் தொழில் ரீதியான தோழிகள். கற்பகராணி பெரியகுளத்தில் தங்க நகைகள் வாங்க ரூ.9.60 லட்சம் எடுத்து வந்து, அம்முபிரியாவை அழைத்துச் சென்று நகை வாங்க ரூ.4.50 லட்சம் அட்வான்ஸ் கொடுத்துள்ளார். மீதமுள்ள ரூ.5.10 லட்சத்தை தனது பையில் வைத்துள்ளார். அம்முபிரியா வீட்டில் பாத்ரூம் சென்று விட்டு குச்சனூர் சென்றார். அங்கு பையை பார்த்த போது ரூ.1 லட்சம் குறைவாக ரூ.4.10 லட்சம் மட்டும் இருந்துள்ளது. அம்முபிரியாவிடம், கற்பகராணி விசாரிக்கையில் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளார். எனவே ரூ.1 லட்சத்தை அம்முபிரியா திருடியதாக கற்பகராணி புகாரில், தென்கரை எஸ்.ஐ., கர்ணன், அம்முபிரியாவிடம் விசாரித்து வருகிறார். --