உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / போலி நகை அடகு வைத்து ரூ.2.39 லட்சம் மோசடி

போலி நகை அடகு வைத்து ரூ.2.39 லட்சம் மோசடி

தேனி:தேனி அருகே உப்புக்கோட்டை கள்ளர் பள்ளித்தெரு அன்பழகன். இவர் தேனி பெரியகுளம் ரோட்டிலுள்ள தனியார் நிதி நிறுவனத்தில் 5 பவுன் நகைகளை ஜூனில் அடகு வைத்து ரூ.2.39 லட்சம் பெற்றார். அந்த நகைகள் தங்க முலாம் பூசப்பட்ட போலி என நிதிநிறுவன அதிகாரிகள் கண்டறிந்தனர்.நிதிநிறுவன மேலாளர் அசோக்குமார், அன்பழகனை தொடர்பு கொண்டு நகையை திரும்ப தரும்படி கூறினார். அதன்பேரில் அன்பழகனின் தந்தை அசோகன் கடந்த ஆகஸ்டில் ரூ.84,500யை நிதி நிறுவனத்தில் செலுத்தினார். அதன்பின் எந்த தொகையும் செலுத்தவில்லை. போலி நகைகளை அடகு வைத்து பணம் பெற்றது தொடர்பாக தேனி எஸ்.பி., சிவபிரசாத்திடம் நிதிநிறுவன மேலாளர் புகார் அளித்தார். எஸ்.பி., உத்தரவில் தேனி போலீசார் விசாரித்து அன்பழகன் மீது வழக்கு பதிவு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை