உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / லாரி மோதியதில் டிரான்ஸ்பார்மர் சேதம் ரூ.2.5 லட்சம் அபராதம்

லாரி மோதியதில் டிரான்ஸ்பார்மர் சேதம் ரூ.2.5 லட்சம் அபராதம்

தேனி: பழனிசெட்டிபட்டி பூதிப்புரம் ரோட்டில் லாரி மின் டிரான்ஸ்பார்மர் மீது மோதியதில் லாரி உரிமையாளருக்கு ரூ.2.05 அபராதம் விதித்தனர்.பழனிசெட்டிபட்டி பூதிப்புரம் ரோட்டில் உள்ள ஆயில் மில்லுக்கு நாமக்கல் மாவட்டத்தில் இருந்து கடலை புண்ணாக்கு லாரியில் ஏற்றி ராசிபுரத்தை சேர்ந்த விஜயகுமார் 41,ஓட்டி வந்தார். நேற்று மதியம் பூதிப்புரம் ரோடு, ஆயில் மில்லுக்கு திரும்பும் போது இடதுபுறம் இந்த மின் டிரான்ஸ்பார்மரில் லாரி மோதியது. டிரான்ஸ்பார்மர் சேதம் அடைந்தது. இதனால் அப்பகுதியில் பலமணிநேரம் மின்தடை ஏற்பட்டது. தகவலறிந்து தேனி சப்டிவிஷன் செயற்பொறியாளர் பிரகலாதன், உதவி செயற்பொறியாளர் செந்தில்குமார், பழனிசெட்டிபட்டி உதவிப் பொறியாளர் உதயனாந்த் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து சேதமடைந்த மின்கம்பம், டிரான்ஸ்பார்மர்களை அகற்றி சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இவ் விபத்தில் ரூ.2 லட்சத்து 5 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தது. இத் தொகையை லாரி உரிமையாளருக்கு அபராதம் விதித்தனர். பழனிசெட்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை