ரூ.31 லட்சம் பேட்டரிகள் திருட்டு
ஆண்டிபட்டி: தேனி மாவட்டம், சக்கம்பட்டியில், 31 லட்சம் ரூபாய் மதிப்பிலான மொபைல் போன் டவரின் பேட்டரிகள் திருடப்பட்டது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.சென்னை, புரசைவாக்கம், சிட்டி சென்டர் பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார், 39; மொபைல் போன் டவர் அமைக்கும் தனியார் நிறுவனத்தில் நிலம் கையகப்படுத்தும் அலுவலராக உள்ளார். ஆண்டிபட்டி அருகே சக்கம்பட்டியில் அருணகிரி என்பவருக்கு சொந்தமான இடத்தில், 60 மீட்டர் உயர மொபைல் போன் டவர் அமைத்து அதற்கான வாடகை செலுத்தி வந்துள்ளார்.டவர் செயல்பாட்டிற்கு இருந்த, 31 லட்சம் ரூபாய் மதிப்பிலான டவர் பேட்டரிகள் மற்றும் மின் சாதன பொருட்கள் திருடு போனதாக, டி.எஸ்.பி., அலுவலகத்தில் புகார் செய்தார். ஆண்டிபட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரிக் கின்றனர்.