உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ.9.37 லட்சம் பறிமுதல்

 ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ.9.37 லட்சம் பறிமுதல்

போடி: மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ளதால் நேற்று உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற மூவரிடம் ரூ.9.37 லட்சம் பறிமுதல் செய்து கருவூத்தில் ஒப்படைத்தனர். போடிமெட்டு செக்போஸ்டில் வேளாண் உதவி இயக்குனர் பாண்டி தலைமையில் வாகன சோதனை நடந்தது. மஹாராஷ்டிரா நாக்பூர் பத்ரி 38, தனது கணவர் டெக்கான் அமர் ஞானி உடன் மூணாறு சுற்றுலா சென்று விட்டு, ராமேஸ்வரம் செல்ல காரில் வந்துள்ளனர். அவரது காரை சோதனை செய்ததில் உரிய ஆவணம் இன்றி இருந்த ரூ. 1.76 லட்சம் பறிமுதல் செய்து போடி சார்நிலை கருவூலத்தில் ஒப்படைத்தனர். வியாபாரியிடம் பறிமுதல் மூணாறு பெரியவரை எஸ்டேட்டை சேர்ந்த காய்கறி வியாபாரி பன்னீர் செல்வம் 40, காய்கறி வாங்க டெம்போ வேனில் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.1.8 லட்சத்தை ஆண்டிபட்டிக்கு கொண்டு வந்தார். இதனை பறிமுதல் செய்து போடி சார்நிலை கருவூலத்தில் ஒப்படைத்தனர். கூடலுார்: ஆண்டிப்பட்டி தொகுதி கூடலுார் புறவழிச்சாலை சந்திப்பில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் கார்த்திராஜா தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். கேரளா ஈராட்டுப்பேட்டையில் இருந்து வந்த ரியாஸ் என்பவரது காரில் சோதனை செய்தபோது முறையான ஆவணங்கள் இன்றி ரூ.1.43 லட்சம் இருந்தது. பணம் பறிமுதல் செய்து உத்தமபாளையம் சார் நிலை கருவூலத்தில் ஒப்படைக்கப் பட்டது. தேனி அருகே கருவேல்நாயக்கன்பட்டியில் நிலைக்குழு சோதனையில் ரூ.85 ஆயிரம் உள்பட ஆறுஇடங்களில் நடந்த சோதனையில் ரூ.9.37 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டு கருவூலங்களில் ஒப்படைக்கப் பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !