உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  ஊரக வளர்ச்சித்துறை ஆர்ப்பாட்டம்

 ஊரக வளர்ச்சித்துறை ஆர்ப்பாட்டம்

தேனி: ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்.,10 முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். சங்கத்தினர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் ஜெகதீசன் தலைமை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர் சரவணன், முன்னாள் மாவட்ட தலைவர் துரைராஜ், மாவட்ட செயலாளர் தாமோதரன், பொருளாளர் முனிராஜ், மாநில நிர்வாகி அர்ஜூனன், அரசு ஊழியர் சங்க மாவட்ட துணைத் தலைவர் ரவிக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அலுவலர்கள் பணிக்கு செல்லாததால் ஊரக வளர்ச்சித்துறை பணிகள் 2வது நாளாக முடங்கின. அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை