33 ஆண்டுகளுக்கு பின் சந்தித்த பள்ளி முன்னாள் மாணவர்கள்
மூணாறு : மூணாறில் 33ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்துக் கொண்ட பள்ளி மாணவ, மாணவிகள் பால்ய கால நினைவுகளை பகிர்ந்து நெகிழ்ச்சி அடைந்தனர்.மூணாறில் லிட்டில் பிளவர் பள்ளியில்1992ல் 7ம் வகுப்பில் படித்த மாணவ, மாணவிகள்160 பேர் படித்தனர். இவர்கள் தற்போதுசந்திக்க விரும்பினர்.முன்னாள் மாணவர்கள் நெல்சன், விஜயகுமார், மாணவி அகிலா ஆகியோர்ஒருங்கிணைந்த்தனர்.பள்ளியில் ஏற்பாடு செய்த சந்திப்புநிகழ்ச்சியில் முன்னாள் மாணவ, மாணவிகள் 50 பேர் பங்கேற்றனர். அவர்களை பள்ளியின் தலைமை ஆசிரியை சிஸ்டர் ஷால்வின் ஹேமா வரவேற்றார்.33 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்துக் கொண்டவர்கள்பள்ளி பருவநினைவுகளை பகிர்ந்து நெகிழ்ச்சி அடைந்தனர்.1992ல் 7ம் வகுப்பு படித்த மாணவிகள் இருவர், இந்த பள்ளியில் ஆசிரியைகளாக பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடதக்கது.