பள்ளி ஆண்டு விழா
பெரியகுளம் : l பெரியகுளம் செவன்த்டே அட்வெண்டிஸ்ட் நர்சரி, பிரைமரி பள்ளியில் 42 வது ஆண்டு விழா நடந்தது. பள்ளி முதல்வர் எட்வின் நேசஸ் தலைமை வகித்தார். துணை முதல்வர் வீரன், பொருளாளர் இக்னாஷியஸ் ஐசக், மண்டல பாதிரியார் இன்பராஜ் முன்னிலை வகித்தனர். பெரியகுளம் டி.எஸ்.பி., நல்லு, திரவியம் மகளிர் கல்லூரி தலைவர் டாக்டர் பாண்டியராஜ், கவுன்சிலர் பங்கேற்று எல்.கே.ஜி., முதல் ஐந்தாம் வகுப்பு வரை அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு பதக்கம், சான்றிதழ் வழங்கினர்.-