உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பள்ளி விளையாட்டு விழா

பள்ளி விளையாட்டு விழா

தேனி: வெங்கடாசலபுரம் ஸ்ரீவரதவேங்கடரமண மேல்நிலைப்பள்ளி விளையாட்டு விழா பள்ளி சபைத் தலைவர் சீனிவாசன் தலைமையில் நடந்தது. சபை செயலாளர் அனந்தகுமார், பொருளாளர் சீனிவாசன் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் தினகரன் வரவேற்றார். இந்திய மருத்துவ சங்க தலைவர் டாக்டர் தியாகராஜன் விழாவில் தேசிய கொடி ஏற்றினார். மாணவர்கள் அணிவகுப்பு ஊர்வலம், கலை நிகழ்ச்சிகள் நடத்தினர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. உதவித் தலைமை ஆசிரியர் சீனிவாசன் நன்றி கூறினார். விழாவில் வர்த்தக பிரமுகர்கள் தாமோதரன், பார்த்திபன், சபை நிர்வாகிகள் சக்தியன், ராஜகோபால், வெங்கடேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி