மேலும் செய்திகள்
போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு
03-Oct-2025
ஆண்டிபட்டி: சர்தார் வல்லபாய் படேல் 150வது பிறந்த தினம் மற்றும் தேசிய ஒற்றுமை தினத்தை முன்னிட்டு ஆண்டிபட்டியில் பள்ளி மாணவர்கள் போலீசார் சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. குழந்தைகள், பெண்கள் பாதுகாப்பு, ரோடு பாதுகாப்பு, போதை பொருட்கள் ஒழிப்பு, சைபர் கிரைம் விழிப்புணர்வு ஆகியவற்றை வலியுறுத்தி நடந்த விழிப்புணர்வு ஊர்வலத்தில் ஆண்டிபட்டி டி.எஸ்.பி., சிவசுப்பு தலைமை வகித்தார். வைகை அணை அரசு மேல்நிலைப்பள்ளி, சக்கம்பட்டி இந்து மேல்நிலைப்பள்ளி, ஆண்டிபட்டி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை மெட்ரிக் பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி ஆண்டிபட்டியில் இருந்து மெயின் ரோடு வழியாக சென்ற ஊர்வலம் சக்கம்பட்டி இந்து மேல்நிலைப் பள்ளியில் முடிந்தது. ஊர்வலத்தில் மாணவர்களுடன் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் கணேசன், போதுமணி, காயத்ரி மற்றும் எஸ்.ஐ.,க்கள் போலீசார் பங்கேற்றனர். பெரியகுளம் வி.நி.அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சர்தார் வல்லபாய் படேல் பிறந்தநாளை முன்னிட்டு, மாணவர்களுடன் போலீசார் தேசிய ஒற்றுமை தினம் உறுதிமொழி எடுத்தனர். போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமை வகித்தார். பள்ளி உதவி தலைமை ஆசிரியர் ஞானசேகரன் முன்னிலை வகித்தார். இன்ஸ்பெக்டர்கள் கீதா, ஜெயராணி ஊர்வலத்தை துவக்கி வைத்தனர். பள்ளிவளாகத்தில் துவங்கிய ஊர்வலம் திருவள்ளுவர் சிலை அருகே சென்று திரும்பியது. தேசிய ஒற்றுமை,ஒருமைப்பாடு, போதை தடுப்பு விழிப்புணர்வு, சாலை விதிகளை மதிப்போம் என மாணவர்கள் கோஷமிட்டனர். போக்குவரத்து சிறப்பு எஸ்.ஐ.,க்கள் கண்ணன், ராஜாமணி, செந்தில்குமார், போலீசார் சத்தியா, சூரிய பிரகாஷ் பங்கேற்றனர். போடி: தேசிய ஒருமைப்பாடு தினம், போலீஸ் துறை சார்பில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. டி.எஸ்.பி., தேவராஜ் (பொறுப்பு) தலைமை வகித்தார். எஸ்.பி., சினேகா பிரியா ஊர்வலத்தை துவக்கி வைத்தார். போதைப் பொருள், பாலியல் தடுப்பு, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்த பதாகைகள் ஏந்தியபடி மாணவர்கள் ஊர்வலம் போடி கட்டபொம்மன் சிலையில் துவங்கி காமராஜ் பஜார் வழியாக பஸ் ஸ்டாண்ட் வரை சென்றனர். இன்ஸ்பெக்டர்கள் கோபிநாத், அய்யம்மாள் ஜோதி, பாலாண்டி, போக்குவரத்து இன்ஸ்பெக்டர் தட்சணாமூர்த்தி, போடி ஜ.கா.நி., மேல்நிலைப் பள்ளி, பங்கஜம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, ஜி.டி., மெட்ரிக் பள்ளி மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். தேனி: - தேசிய ஒற்றுமை தினம் தேனி பிரசன்டேஷன் கான்வென்ட் பெண்கள் பள்ளியில் மாவட்ட காவல் துறை சார்பில் போதை ஒழிப்பு, சைபர் குற்றப்பாதுகாப்பு, குழந்தை திருமண ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலத்தை எஸ்.பி., சினேஹாபிரியா கொடி அசைத்து துவக்கி வைத்தார். ஊர்வலம் பள்ளியில் துவங்கி பெத்தாட்சி விநாயகர் கோயில் நான்கு ரோடு சந்திப்பு வரை சென்று, மீண்டும் பள்ளியில்நிறைவடைந்தது. சைபர் குற்றத்தடுப்புப்பிரிவு ஏ.டி.எஸ்.பி., ஜெரால்டு அலெக்ஸ்சாண்டர், டி.எஸ்.பி., முத்துக்குமார், இன்ஸ்பெக்டர்கள் சஜூக்குமார், ஜவஹர், ராமலட்சுமி, பிரசன்டேஷன் கான்வென்ட் பள்ளி தலைமை ஆசிரியை சகோதரி ஸ்டெமில்டா, தாளாளர் ஷில்டாமேரி, அரசு ஐ.டி.ஐ., முதல்வர் சேகரன், ஆசிரியர் அன்பரசன், தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் கல்லுாரி முதல்வர் மதளைசுந்தரம், துணை முதல்வர் மாதவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
03-Oct-2025