‛புலிகள் பாதுகாப்பு குறும்படம் திரையிடும் தேதி மாற்றம்
தேனி : தேனி கலெக்டர் ஷஜீவனா அறிக்கையில் கூறியிருப்பதாவது: புலிகள் பாதுகாக்கப்படவேண்டியதன் முக்கியத்துவம் குறித்து இயக்குனர் சேகர் தத்தாத்ரியின் விழிப்புணர்வு குறும்படம் டிச.28 ல் கலெக்டர் அலுவலக புதிய கூட்டரங்கில் திரையிடப்பட ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.இந்நிலையில் நிர்வாக காரணங்களுக்காக இக்குறும்படம் 2025 ஜன.4 மாலை 4:30 மணிக்கு திரையிடப்பட உள்ளது. இதற்கான இலவச டிக்கெட்களை தேனி நலம் மருத்துவமனை, கலெக்டர் அலுவலகம், தேனி தனிஷ்க் ஜூவல்லரி ஷோரூம் ஆகிய மூன்று இடங்களில் பெற்றுக் கொள்ளலாம்.டிச., 28 தேதிக்கான டிக்கெட் பெற்றவர்கள் அதே டிக்கெட்டை வைத்து அரங்கில் குறும்படம் பார்க்க அனுமதிக்கப்படுவர் என, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.