மேலும் செய்திகள்
மாட்டுபட்டி அணையில் விமானம் இயக்க எதிர்ப்பு
13-Nov-2024
மூணாறு : மூணாறில் கடல் விமானம் (சீ பிளேன் ) திட்டத்தை செயல்படுத்த விடாமல் வனத்துறை தடுப்பதாக கூறி, ஆளும் மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட்டைச் சேர்ந்த ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் வனத்துறை அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினர்.கொச்சி, மூணாறு இடையே சுற்றுலா பயணிகள் பயன்பெறும் வகையில் கடல் விமானம் (சீ பிளேன்) இயக்க முடிவு செய்யப்பட்டு சோதனை ஓட்டம் நவ.11ல் நடந்தது. கொச்சியில் அரசு வசம் உள்ள போல்ஹாட்டி பேலஸ் அருகே கடல் பகுதியில் இருந்து இயக்கப்பட்ட கடல் விமானம் மூணாறு அருகே மாட்டுபட்டி அணையில் இறங்கியது.மாட்டுபட்டி அணையை சுற்றியுள்ள பகுதிகள் காட்டு யானை உள்பட வனவிலங்குகளின் வாழ்விடமாக உள்ளதால், கடல் விமானம் திட்டம் செயல்படுத்தும்பட்சத்தில், வனவிலங்குகள் பெரிதும் பாதிக்கப்படும் என கூறி வனத்துறையினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். போராட்டம்
இந்நிலையில் கடல் விமானம் திட்டத்தை செயல்படுத்த விடாமல் வனத்துறை தடுப்பாக கூறி, ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டைச் சேர்ந்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் தேவிகுளம் வனத்துறை அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் நடத்தினர்.ஜனநாயக வாலிபர் சங்கம் மாவட்ட தலைவர் சுதீஷ் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூ., இடுக்கி மாவட்ட செயலாளர் வர்க்கீஸ் துவக்கி வைத்தார். தேவிகுளம் எம்.எல்.ஏ., ராஜா, ஜனநாயக வாலிபர் சங்க இடுக்கி மாவட்ட செயலாளர் ரமேஷ்கிருஷ்ணன், இணை செயலாளர் தேஜஸ் கே.ஜோஸ், ஒன்றிய செயலாளர் சம்பத், மாநில குழு உறுப்பினர் அனுப் உள்பட பலர் பங்கேற்றனர்.
13-Nov-2024