பஸ் சக்கரத்தில் சிக்கி காவலாளி பலி
தேனி: வீரபாண்டி அருகே உள்ள தப்புக்குண்டு கருப்பையா 70, பழனிசெட்டிபட்டியில் உள்ள ஓட்டலில் காவலாளியாக பணிபுரிந்தார். நேற்று மாலை பணி முடித்து டூவீலரில் வீடு திரும்பினார். போடி விலக்கு அருகே சென்ற போது கம்பத்தில் இருந்து தேனி வழியாக திண்டுக்கல் சென்ற அரசு பஸ் மோதி கீழே விழுந்தார். அதே பஸ்சின் பின் சக்கரம் கருப்பையா மீது ஏறி இறங்கியதில் சம்பவ இடத்தில் பலியானார். அவரது உடலை மீட்டு அரசு மருத்துவக் கல்லுாரிக்கு அனுப்பி வைத்தனர். அரசு பஸ் டிரைவர் ராமசந்திரன் மீது வழக்கு பதிந்து பழனிசெட்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.