மேலும் செய்திகள்
வண்டல் மண் கடத்தல் டிராக்டர் பறிமுதல்
29-Sep-2026
ஆண்டிபட்டி: மயிலாடும்பாறை பொன்னம்படுகை அருகே வண்டல் மண் திருடுவதாக கிடைத்த தகவலில் மயிலாடும்பாறை போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்றனர். பொன்னம்படுகை ரோடு கோவிலாங்குளம் கண்மாய் அருகே டிராக்டரில் வண்டல் மண் கொண்டு சென்றனர். போலீசார் விசாரணையில் விவசாயி பணிக்களுக்கு என கூறி காளவாசலுக்கு கொண்டு சென்றது தெரிந்தது. வண்டல் மண்ணுடன் டிராக்டரை பறிமுதல் செய்து, டிரைவர் வினோத்குமார் 37, என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.
29-Sep-2026