சுய உதவிக்குழுவினர் மனு
தேனி: வீரபாண்டி சிவசக்திநகர் ஸ்ரீபட்டாளம்மன் மகளிர் சுய உதவிக்குழு நிர்வாகிகள் பழனியம்மாள், காளீஸ்வரி உள்ளிட்டோர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். மனுவில், ‘சுய உதவி குழுவில் 14 பேர் உள்ளோம். வீரபாண்டி வேளாண் கூட்டுறவு வங்கியில் உறுப்பினர்கள் தலா ரூ.20 ஆயிரம் கடன் வாங்கி செலுத்தி உள்ளோம். மீண்டும் கடன் கேட்டு விண்ணப்பி்த்தோம். ஆனால், கூட்டுறவு வங்கியில் கடன் வழங்காமல் அலைக்கழிப்பு செய்கின்றனர். குழு உறுப்பினர்களுக்கு கடன் வழங்க மாவட்ட நிர்வாகம் பரிந்துரை செய்ய,’ கோரினர்.