உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கல்லுாரியில் கருத்தரங்கம்

கல்லுாரியில் கருத்தரங்கம்

தேனி: தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் கல்லுாரியியல் 5ஜி வயர்லெஸ் கம்யூனிகேசன் பற்றிய கருத்தரங்கம் நடந்தது. கல்லுாரி செயலாளர்கள் ராஜ்குமார், மகேஸ்வரன் தலைமை வகித்தனர். இணைச் செயலாளர் நவீன்ராம் முன்னிலை வகித்தார். கல்லுாரி முதல்வர் மதளைசுந்தரம் வரவேற்றார். வேலுார் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி பேராசிரியர் கண்ணதாசன் 5ஜி வயர்லெஸ் தொழில்நுட்பம், சாப்ட்வேர் செயல்பாடுகள் பற்றி விளக்கினார். பங்கேற்ற மாணவர்களுக்கு தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறைத் தலைவர் ராஜமோகன், நிர்வாகிகள் சான்றிதழ் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ