உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / உரிமை கோரப்படாத வைப்பு தொகை பெறுவதற்கு தீர்வு முகாம்

உரிமை கோரப்படாத வைப்பு தொகை பெறுவதற்கு தீர்வு முகாம்

தேனி: கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட நிர்வாகம், முன்னோடி வங்கி சார்பில் உரிமை கோரப்படாத வைப்புத் தொகை பெறுவதற்கான தீர்வு முகாம் நடந்தது. கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தலைமை வகித்தார். மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கார்த்திகேயன், அனைத்து வங்கி அலுவலர்கள் பங்கேற்றனர். அதிகாரிகள் கூறியதாவது: மத்திய அரசின் நிதி சேவைகள் துறை சார்பில், 'உங்கள் பணம், உங்கள் உரிமை' திட்டம் துவங்கப்பட்டு உள்ளது. இதற்காக முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. பல வங்கிகளில் உரிமை கோரப்படாத வைப்புத்தொகை உள்ளது. இந்த வைப்புத் தொகைகளை உரியவர்களிடம், அல்லது அவர்களின் வாரிசுகள் பரிந்துரைக்கப் பட்டவர்களிடம் வட்டியுடன் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. வைப்புத் தொகைக்கான சான்றிதழ், வாரிசு, பரிந்துரைக்கப் பட்டவருக்கான உரிய ஆவணங்களை சமர்ப்பித்து உரிமை கோரப்படாத தொகை திரும்ப பெறலாம். இதற்காக அக்.24ல் பெரியகுளம் ஒன்றிய அலுவலகம், அக்.27ல் ஆண்டிபட்டியில் சக்கம்பட்டி மகளிர் திட்ட அலுவலக வளாகம், அக்.28ல் மயிலாடும்பாறை ஒன்றிய அலுவலகம், அக்.29ல் சின்னமனுார், அக்.30ல் போடி, அக்.31ல் கம்பம் ஆகிய பகுதிகளில் ஒன்றிய அலுவலகங்களில் சிறப்பு முகாம் நடக்க உள்ளது., என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை