உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / சுருளி ரோட்டில் ஓடும் கழிவுநீர் சுற்றுலா பயணிகள் முகம் சுளிப்பு

சுருளி ரோட்டில் ஓடும் கழிவுநீர் சுற்றுலா பயணிகள் முகம் சுளிப்பு

கூடலுார் : கூடலுாரில் இருந்து சுருளி அருவி செல்லும் ரோட்டில் பல மாதங்களாக கழிவு நீர் ஓடுவதால் சுற்றுலா பயணிகள் முகம் சுளித்து செல்கின்றனர்.கூடலுாரில் இருந்து சுருளி அருவிக்கு கருநாக்கமுத்தன்பட்டி வழியாக 9 கி.மீ., தூர ரோடு உள்ளது. இந்த ரோட்டின் துவக்கப்பகுதியில் கழிவு நீரோடை வசதி இல்லாததால் பல மாதங்களாக கழிவு நீர் ரோட்டில் ஓடுகிறது.இதனால் சுகாதாரக் கேடு ஏற்படுவதுடன் அப்பகுதியில் ரோடு சேதம் அடைந்த நிலையிலேயே உள்ளது. தற்போது கோடை விடுமுறையால் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்துவரும் சுற்றுலாப் பயணிகள் சுருளி அருவிக்கு சென்று கூடலுார் வழியாக கேரளாவில் உள்ள தேக்கடிக்கு அதிகம் செல்கின்றனர். அதேபோல் கேரளாவில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் சுருளி அருவிக்கு செல்ல இந்த ரோடு அதிகம் பயன்படுகிறது.கழிவுநீர் ரோட்டில் ஓடுவதால் முகம் சுளித்து செல்கின்றனர். இப்பகுதியில் கழிவுநீரோடை அமைத்து விரைவில் ரோட்டை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை