சங்கராபுரம் - தேவாரம் ரோடு அகலப்படுத்தும் பணி துவக்கம்
போடி; போடி தேவாரம் செல்லும் ரோட்டில் வெம்பக்கோட்டை - கோணாம்பட்டி பிரிவு வரை ரூ. 6.20 கோடி செலவில் நெடுஞ்சாலைத்துறை மூலம் ரோடு அகலப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது.போடியில் இருந்து உத்தமபாளையம் செல்லும் இரு வழிச்சாலையை நான்குவழிச்சாலையாக மாற்றுவதற்கான பணிகள் துவங்கி உள்ளது.முதல் கட்டமாக போடி அருகே வெம்பக்கோட்டையில் இருந்து கோணாம்பட்டி பிரிவு வரை ஒன்றரை கி.மீ., தூரம் ரோட்டின் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. தற்போது ஒருங்கிணைந்த சாலைகள் மேம்பாடுதிட்டத்தின் கீழ் ரூ.6.20 கோடி செலவில் ரோடு, தடுப்புச்சுவர், பாலங்களும், கோணாம்பட்டி பிரிவு, சங்கராபுரம் கருப்புசாமி கோயில் அருகே பயணிகள் நிழற்குடை கட்டுவதற்கான பணிகள் நடந்து வருகின்றன.இப் பணியினை நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் சுவாமிநாதன், உதவி கோட்ட பொறியாளர் தங்கராஜ் ஆகியோர் ஆய்வு செய்தனர்.