ஒரே நாளில் 4 அடி உயர்ந்தது நிரம்பிய சண்முகா நதி அணை
கம்பம் : சண்முகா நதி அணையின் நீர் மட்டம் ஒரே நாளில் 4 அடி உயர்ந்து முழு கொள்ளளவை மீண்டும் எட்டியது. உபரி நீர் மறுகால் பாய்ந்து வருகிறது.சண்முகா நதி அணையில் முழு கொள்ளளவு 52.5 அட. அணையிலிருந்து 26 அடி வரை தண்ணீர் எடுத்த பயன்படுத்தாலம். 26 அடிக்கு மேல் தண்ணீர் எடுக்க முடியாது. அணையின் மூலம் நேரடி பாசன வசதியளிக்காவிட்டாலும், கிணறுகளின் நிலத்தடி நீர் மட்டம் உயர பயன்படும்.ஒவ்வொரு ஆண்டும் நவம்பரில் அணையிலிருந்து தண்ணீர் பாசனத்திற்கென விடுவிப்பது வழக்கம். நவ . 12 ல் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. விநாடிக்கு 14.47 கன அடி திறக்கப்படுகிறது. அணையின் நீர் மட்டம் நேற்று முன்தினம் 46 அடியாக இருந்தது. மழையால் அணையின் நீர்மட்டம் நேற்று ஒரே நாளில் 4 அடி உயர்ந்து 52.5 அடியானது. முழு கொள்ளளவை எட்டியதால் உபரி நீர் வரட்டாறில் மறுகால் பாய்கிறது. அணைக்கு விநாடிக்கு 103 கன அடி நீர் வரத்து உள்ளது. அணையிலிருந்து 14. 47 கன அடி விடுவிக்கப்படுகிறது