உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கடையை உடைத்து திருட்டு

கடையை உடைத்து திருட்டு

தேனி : உத்தமபாளையம் கோட்டை மேடு மேல ரத வீதியை சேர்ந்தவர் முகம்மது ரபீக் 37. இவர் அனுமந்தன்பட்டி பேரூராட்சி அலுவலகம் அருகில் ஓட்டல் நடத்தி வருகிறார். இதில் முகம்மது ரபீக், அவரது மனைவி பெனாசீர் அலி, கம்பம் கோகிலா பணிபுரிகின்றனர். அக்., 20ல் கடையை பூட்டிவிட்டு, மறுநாள் திறக்கச் சென்ற போது ஓட்டலில் பூட்டு உடைத்து திறந்து கிடந்தது. அங்கிருந்த பெட்டி உடைத்து ரூ.1500, ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள 100 கிராம் எடையுள்ள வெள்ளி கைச்செயின் திருடு போனது தெரிந்தது. உத்தமபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி