உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மூணாறில் கடைகள் அடைத்து போராட்டம்

மூணாறில் கடைகள் அடைத்து போராட்டம்

மூணாறு : மூணாறில் ரோட்டோர கடைகளை அகற்றகோரி வர்த்தக சங்கங்கள் கூட்டமைப்பு சார்பில் கடைகளை அடைத்து போராட்டம் நடந்தது.மூணாறில் போக்குவரத்து ஆலோசனை குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுபடி, ரோட்டோர கடைகளை அகற்றும் பணி அக்.25ல் துவங்கியது. அதற்கு அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அக். 30ல் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் கடைகள் அகற்றுவதற்கு எதிராக முடிவு எடுக்கப்பட்டது. அதே முடிவை ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்டதால் கடைகள் அகற்றும் பணி முடங்கியது.போராட்டம்: ரோட்டோர கடைகளால் வர்த்தகர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதால், கடைகளை அகற்றகோரி வர்த்தக சங்கங்கள் களம் இறங்கின. கேரள வியாபாரி விவசாயி ஏகோபன சமிதி, வியாபாரி விவசாயி சமிதி எனும் வர்த்தக சங்கங்கள், மூணாறு காய்கறி மார்க்கெட் சங்கம், ஓட்டல், ரெஸ்டாரண்ட் சங்கம் உள்பட பல்வேறு சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நேற்று மூணாறில் காலை 11:00 மணி வரை கடைகளை அடைத்து ஊராட்சி அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் நடந்தது. வியாபாரி, விவசாயி ஏகோபன சமிதி மூணாறு பகுதி செயலாளர் ராமராஜ் தலைமை வகித்தார். தலைவர் பாபுலால் துவக்கி வைத்தார். பொது செயலாளர் கணேசன், பொருளாளர் மனோகரன், வியாபாரி விவசாயி சமிதி மாவட்ட குழு உறுப்பினர் ஜாபர் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ