உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  இளைஞர்களுக்கு திறன் பயிற்சி

 இளைஞர்களுக்கு திறன் பயிற்சி

தேனி: தாட்கோ சார்பில் ஆதிதிராவிடர், பழங்குடியின இளைஞர்களுக்கு திறன் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்துடன் இணைந்து சுழலியல் சுற்றுலா திறன் பயிற்சி, ஏ.ஐ., பயிற்சி, ஆடை வடிவமைப்பு, சிகை அலங்காரம், அழக்குகலை பயிற்சி 3 மாதங்கள் வழங்க உள்ளது. இதில் 18 முதல் 40 வயதிற்குட்பட்டோர் விண்ணப்பிக்கலாம். சென்னையில் தங்க விடுதி, உணவு செலவு தாட்கோ வழங்கும். பயிற்சியில் சேர www.tahdco.comஎன்ற இணைய முகவரியில் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தாட்கோ பிரிவை அணுகலாம் அல்லது 04546 260 995 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை