கூடலுாரில் மாமியார் கொலை மருமகன் ஓட்டம்
கூடலுார்: கூடலுார் அருகே குள்ளப்பகவுண்டன்பட்டியைச் சேர்ந்த கொடியரசனின் மனைவி பூங்கொடி 55. இவரது மகள் நதியா 35, கருத்து வேறுபாடு காரணமாக கணவனிடம் கோபித்துக் கொண்டு தாய்வீட்டில் கடந்த 20 நாட்களாக வசித்து வருகிறார்.இந்நிலையில் நேற்று நதியாவின் கணவர் கே.கே.பட்டியைச் சேர்ந்த சுருளி 45, மாமியாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றியதில் மாமியாரின் கழுத்தில் கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடி விட்டார். கம்பம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். கூடலுார் தெற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய சுருளியை தேடி வருகின்றனர்.