சோத்துப்பாறை அணை ஒரே நாளில் 10 அடி உயர்வு
பெரியகுளம் : பெரியகுளத்திலிருந்து 8 கி.மீ., தூரத்தில் சோத்துப்பாறை அணை உள்ளது. கொடைக்கானல் மலைப்பகுதியில் பெய்யும் மழை, சோத்துப்பாறை அணை நீர் பிடிப்பு பகுதியில் பெய்யும் மழையால் அணைக்கு நீர் வரத்து உள்ளது. அணையின் மொத்த உயரம் 126.28 அடி. கொடைக்கானல் மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் அக்.12ல் 76.42 அடியாகவும், நேற்று முன்தினம் 76.75 அணியாகவும், நேற்று ஒரே நாளில் 10 அடி உயர்ந்து 86.42 அடியாக உயர்ந்தது. அணைக்கு வினாடிக்கு 112 கன அடி நீர் வரத்து உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.