உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / சோத்துப்பாறை அணை ஒரே நாளில் 21 அடி உயர்வு

சோத்துப்பாறை அணை ஒரே நாளில் 21 அடி உயர்வு

பெரியகுளம்: சோத்துப்பாறை அணைப்பகுதியில் பெய்த மழையால் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 21 அடி உயர்ந்தது. பெரியகுளத்திலிருந்து 8 கி.மீ., தொலைவில் சோத்துப்பாறை அணை உள்ளது. கொடைக்கானல் மலைப்பகுதி மற்றும் சோத்துப்பாறை அணை நீர் பிடிப்பு பகுதியில் பெய்யும் மழையால் அணைக்கு நீர்வரத்து உள்ளது. அணையின் மொத்த உயரம் 126.28 அடி.வெயில் தாக்கத்தால் கடந்த வாரம் முதல் அணையின் நீர்மட்டம் குறையத் துவங்கியது. நேற்று முன்தினம் அணையின் உயரம் 41.65 அடி. இந்நிலையில் அணைப்பகுதியில் பெய்த மழையால் அணையின் நீர்மட்டம் நேற்றுமுன்தினம்ஒரே நாளில் 21 அடி உயர்ந்து. வினாடிக்கு 36 கன அடி நீர் வரத்து உள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் 62.97 அடியாக உயர்ந்தது.நேற்று 66.50 அடியாக உயர்ந்தது.பெரியகுளம் பகுதிக்கு வினாடிக்கு 3 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. நேற்று முன்தினம் அணை பகுதியில்4.4மி.மீ.,மழை பதிவானது. காலை முதல் சாரல் மழையும், அவ்வப்போது கனமழை செய்வதால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்வதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை