உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / சோத்துப்பாறை அணை பாதுகாப்பு செயல் விளக்கம்

சோத்துப்பாறை அணை பாதுகாப்பு செயல் விளக்கம்

பெரியகுளம்: சோத்துப்பாறை அணை பாதுகாப்பு குறித்து நீர்வளத்துறை அலுவலர்கள் விளக்கம் அளித்தனர். பெரியகுளம் சோத்துப்பாறை அணை 2001ல் கட்டிமுடிக்கப்பட்டு பாசனத்திற்கு திறக்கப்பட்டது. 2865 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. அணையின் மொத்த உயரம் 126.38 அடி, நேற்று 52.32 அடியாக இருந்தது. தற்போது பெரியகுளம் குடிநீருக்கு வினாடிக்கு 3 கன அடி வினியோகிக்கப்படுகிறது. அணைகள் பாதுகாப்பு சட்டம் 2021-ன் படி ஒவ்வொரு அணைக்கும் அதன் அவசரகால செயல்திட்டத்தை உருவாக்க வேண்டும். இதன் பேரில் சோத்துப்பாறை அணை இயற்கை பேரிடரினாலோ, வேறு ஏதோ காரணங்களால் உடைந்து வராகநதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால், எந்தெந்த துறைக்கு என்னென்ன பொறுப்புகள் உள்ளது. இது குறித்து கிண்டி அண்ணா பல்கலை பேராசிரியர்களால் ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வு குறித்து அனைத்து துறை அலுவலர்கள் விவரிப்பது சம்பந்தமான கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ரஞ்சித்சிங் தலைமையில் நடந்தது. நீர் வளத்துறை கண்காணிப்பு பொறியாளர் வீரலட்சுமி, மஞ்சளாறு வடிநில கோட்ட செயற்பொறியாளர் சரவணன் முன்னிலை வகித்தனர். பெரியகுளம் சப்-கலெக்டர் ரஜத்பீடன், உதவி செயற்பொறியாளர் அன்பரசன், உதவி பொறியாளர் கமலக்கண்ணன் உட்பட பிற துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை